192
யாழ்ப்பாண மாவட்ட செயலராக மருதலிங்கம் பிரதீபன் அமைச்சரவை அனுமதியின் பிரகாரம் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கான நியமனக் கடிதம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை அமைச்சரவை செயலாளர் W. M. D. J. பெர்னாண்டோவினால் அமைச்சரவை அலுவலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
2024 மார்ச் 09 ம் திகதி முதல் பதில் மாவட்ட செயலராக கடமையாற்றி வந்த நிலையில் இன்றைய தினம் செயலராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love