179
வலிகாமம் வடக்கிலுள்ள 2400 ஏக்கர் காணிகளை விடுவிக்கக்கோரிய தொடர் போராட்டம் மயிலிட்டி சந்தியில் இன்றைய தினம் சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
30 வருடங்களுக்கு மேலாக இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி குறித்த அமைதிவழிப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மக்களின் விவசாய நிலங்கள், குடியிருப்பு நிலங்கள் மற்றும் தொழில் நிலையங்கள் உள்ளிட்ட தனியார் காணிகள் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக உயர் பாதுகாப்பு வலயமாக இருந்து வருகிறது.
ஆனால் யுத்தம் நிறைவிற்கு வந்த பின்னராக ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு ஆட்சியாளர்களும் மக்கள் காணிகளை படிப்படியாக சிறிய சிறிய துண்டுகளாக விடுவித்தனர்.
இருப்பினும் விடுவிக்கப்பட்ட காணிகளில் மக்கள் சுயமாக தமது வாழ்வாதாரத்தை முன்னெடுக்க முடியாத நிலையில் 2400 ஏக்கர் காணிகளையும் முழுமையாக விடுவிப்பதே தமது வாழ்வியலை முன்னெடுக்க முடியும் என்ற நோக்கில் குறித்த போராட்டத்தை முன்னெடுப்பதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்தனர்.

Spread the love