229
முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸவுக்கு சொந்தமானதென தொிவிக்கப்படும் கதிர்காமம்- மெனிக் கங்கைக்கு அருகில் உள்ள வீடு நீதிமன்றத்தால் நேற்று திங்கட்கிழமை (13) நீர்ப்பாசனத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத் துறையால் தாக்கல் செய்யப்பட்ட வழக்குக்கமைய குறித்த கட்டிடம் அரசாங்கத்திடம் வழங்கப்பட்டுள்ளது.
மொனராகலை நீர்ப்பாசன இயக்குநர் அப்துல் ஜப்பார் குறித்த கட்டிடத்தைக் கையகப்படுத்தியதுடன் அந்தக் கட்டிடம் அரசாங்க அதிகாரிகளுக்கான தங்குமிடமாக பயன்படுத்தப்படும் எனவும், அதிலிருந்து அரசாங்கத்திற்கு வருமானம் கிடைக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளாா்.
Spread the love

