61
மக்கள் விடுதலை முன்னணியின் ஸ்தாபகத் தலைவரான ரோஹன விஜேவீரவின் குடும்பத்தினரின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புக்காக, 26,278,052 ரூபாய்கள் செலவிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா எழுப்பிய வாய்மொழி மூல வினாவுக்கு அரசாங்கத்தின் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட பதிலில் இத்தகவல்கள் வெளிவந்துள்ளன.
இலங்கையின் மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) ஸ்தாபகத் தலைவர் ரோஹன விஜேவீரவின் குடும்பத்தினரின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புக்காக அரசு செலவிட்ட தொகை தொடர்பான தகவல் நாடாளுமன்றில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
பின்னணி: 1989 ஆம் ஆண்டின் இறுதியில் ரோஹன விஜேயவீரவின் மறைவைத் தொடர்ந்து, அவரது மனைவி சித்ராங்கனி விஜேவீர மற்றும் அவர்களின் 06 பிள்ளைகளும் பாதுகாப்பு அச்சம் காரணமாக அரச பாதுகாப்பைக் கோரினர்.
தங்கியிருந்த இடங்கள்: இலங்கை காவற்துறையினர் மற்றும் பாதுகாப்புப் படையினரின் மேற்பார்வையில் ஆரம்பத்தில் திருகோணமலை கடற்படைத் தளத்திலும், பின்னர் வெலிசறை கடற்படை முகாமிலும் இவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
தற்போது சித்ராங்கனி விஜேயவீர மற்றும் விசேட தேவையுடைய அவரது மூத்த மகள் ஆகியோரின் பராமரிப்புப் பணிகளுக்கு மட்டுமே அரசு தொடர்ந்து உதவிகளை வழங்கி வருகின்றது.
Spread the love

