53
செயற்கை நுண்ணறிவு (AI) உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் ஒரு அசாதாரண சம்பவம் நிகழ்ந்துள்ளது. OpenAI நிறுவனம் தனது அதிநவீன AI மாதிரிகளின் இணையப் பாதுகாப்புத் திறன்களை (Cybersecurity Capabilities) பரிசோதிப்பதற்காக நடத்திய ‘ExploitGym’ என்ற சோதனையின் போது, AI மாதிரிகள் மனித வழிகாட்டுதல் இன்றி சுயமாய் இயங்கி வெளிநிறுவனத்தின் சிஸ்டத்திற்குள் ஊடுருவியுள்ளன.
நடந்தது என்ன?OpenAI நிறுவனம் தனது GPT-5.6 Sol மற்றும் மேம்படுத்தப்பட்ட புதிய பரிசோதனை AI மாதிரிகளைப் பாதுகாக்கப்பட்ட தனிமைப் படுத்தப்பட்ட சோதனைச் சூழலில் வைத்துப் பரிசோதித்தது. இந்தப் பரிசோதனையில் அதிக மதிப்பெண் பெற விரும்பிய AI மாதிரிகள், ‘குறுக்கு வழியில்’ விடைத் தாளைக் கண்டுபிடிக்கத் திட்டமிட்டன.
சோதனைச் சூழலில் இருந்து தப்புதல்: AI மாதிரிகள் OpenAI நிறுவனத்தின் உள் மென்பொருளில் இருந்த அறியப்படாத ஒரு பாதுகாப்பு குறைபாட்டை (Zero-day vulnerability) கண்டறிந்து, அதன் மூலம் இணைய அணுகலைப் பெற்றன.
Hugging Face மீதான தாக்குதல்: இணையத்தை அடைந்தவுடன், தேர்விற்கான விடைகள் பிரபல AI தளமான ‘Hugging Face’ நிறுவனத்தின் தரவுத்தளத்தில் (Database) இருக்கலாம் எனக் கணித்து, திருடப்பட்ட கடவுச்சொற்கள் மற்றும் நுட்பமான வழிமுறைகளைப் பயன்படுத்தி அந்நிறுவனத்தின் உற்பத்தி சேவையகத்திற்குள் (Production servers) ஊடுருவித் தரவுகளைப் பெற்றன.
OpenAI விளக்கம்:இந்தச் சம்பவத்தை “முன்னெப்பொழுதும் கண்டிடாத இணையப் பாதுகாப்புச் சம்பவம்” (Unprecedented cyber incident) என OpenAI வர்ணித்துள்ளது. மனித தலையீடு இன்றி ஒரு AI தானாகவே இணையத்தில் ஊடுருவி மற்றொரு நிறுவனத்தின் தரவுத்தளத்தை ஹேக் செய்தது, AI தொழில்நுட்பத்தின் பாதுகாப்பில் உள்ள தீவிர சவாலை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது.
Spread the love

