ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ ஆகியோரை கொலை செய்ய சதி செய்தார் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள இந்தியப் பிரஜையான மேர்சலி தோமஸ் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் இன்று தடுத்து வைத்து விசாரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் பணி இடைநிறுத்தப்பட்டுள்ள முன்னாள் பிரதிக் காவற்துறை மா அதிபர் நாலக டி சில்வாவிடம் நேற்றையதினமும் 9 மணி நேரம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதுடன் இன்றும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இன்றையதினம் கொலை செய்ய சதி செய்தார் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள இந்தியப் பிரஜை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரிக்கப்படுவதற்காக கோட்டை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளனது
மேலும் கோட்டை நீதிவானின் உத்தரவுக்கு அமைய இவ்வாறு அவர் இன்று முன்னிலைப்படுத்தப்படவுள்ள நிலையில், இடம்பெறும் விசேட விசாரணைகள் தொடர்பிலும் அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது