Home இலங்கைநரேந்திர மோடியுடன் பேசப்பட்ட விடயங்கள் குறித்து பிரதமர் ஜனாதிபதிக்கு எடுத்துரைப்பு

நரேந்திர மோடியுடன் பேசப்பட்ட விடயங்கள் குறித்து பிரதமர் ஜனாதிபதிக்கு எடுத்துரைப்பு

by admin

 
இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசப்பட்ட விடயங்கள் மற்றும் ஏனைய சந்திப்புகள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எடுத்துரைத்துள்ளார். இந்தியப் பயணத்தினை நிறைவு செய்துகொண்டு நாடு திரும்பியுள்ள பிரதமர் நேற்றையதினம் ஜனாதிபதியை சந்தித்த போதே இவ்வாறு விளக்கமளித்துள்ளார்.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் மாத்திரம் கலந்துகொண்ட இந்த சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் வரை இடம்பெற்றுள்ளதாகவும் இதன்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பில் பேசப்பட்ட விடயங்களை பிரதமர் ஜனாதிபதிக்கு தெளிவுப்படுத்தியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் அந்நாட்டு உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ராஜ்நாத் சிங் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோருடனான சந்திப்புகள் குறித்தும் பிரதமர் தெளிவுப்படுத்தியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More