உத்தேச புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் பழையதை விடவும் ஆபத்தானது என, சமூக மற்றும் சமய மத்திய நிலையத்தில் இடம் பெற்ற ஊடகவியளாளர் சந்திப்பின் போது முன்னிலை சோஷலிஸ கட்சி தெரிவித்துள்ளது.
நாட்டின் பயங்கரவாத செயல்களுக்கு எதிராகவும் , பயங்கரவாதத்துடன் இணைந்த செயற்பாடுகளை தடுப்பதற்காகவும், 1979 ஆம் ஆண்டு 48 ஆம் இலக்க பயங்கரவாத தடைச்சட்டத்தில் பார்க்கிலும் தற்போது கொண்டுவரப்பட்டிருக்கும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமானது நீதிக்கு எதிரானது. என முன்னிலை சோஷலிஸ கட்சியின் பேச்சாளர் புபுது ஜெயக்கொடதெரிவித்துள்ளார். இந்த நிலையில் பயங்கரவாத தடைச்சட்டத்தை தடை செய்தல் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் உட்பட நாட்டுமக்களின் நலனை பாதிக்கும் வகையில் அமையும் அடக்கு முறை சட்டங்களை தவிர்பபதற்காகவும் ஒன்றிணைந்து குரல் கொடுப்பதற்காக இடதுசாரி கட்சிகள் மற்றும் அமைப்புக்களை உள்ளடக்கிய வகையில் செயற்படவுள்ளதாகவும் தெரிவித்தார் .
1 comment
பயங்கரவாதத்துக்கு என்று தனியான சட்டம் தேவையில்லை. நடைமுறையிலுள்ள சிவில் மற்றும் குற்றவியல் சட்டங்களே போதுமானது