மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேசத்தில் உள்ள வாகரை கண்டலடி மாவீரர்துயிலுமில்லத்தில் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் நவம்பர் மாதம் வரும் மாவீரர் தினத்தை முன்னிட்டு வடக்கு கிழக்கில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் சிரமதான மீளமைப்பு பணிகள் தொடங்கியுள்ளன.
இதனடிப்படையில் வடக்கில் கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம் மற்றும் முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணிகள் இடம்பெற்றுள்ள நிலையில் கிழக்கு மாகாணத்தில் உள்ள துயிலும் இல்லங்கள் பலவற்றிலும் மாவீரர் தின ஏற்பாடுகளும் சிரமதானப் பணிகளும் இடம்பெற்று வருகின்றன.
மட்டக்களப்பு தரவை, மாவடிமுன்மாரி,தாண்டியடி, வாகரை கண்டலடி மாவீரர் துயிலுமில்லங்கள், அம்பாறை கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலுமில்லம்திருமலை ஆலங்குளம், செம்பிமலை மாவீரர் துயிலுமில்லம் என ஏழு துயலுமில்லங்களில் சிரமதானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எதிர்வரும் கார்த்திகை 27 ஆம் திகதி மாவீரர்களுக்கான அஞ்சலியினை அனுஸ்டிப்பதற்கு ஏதுவாக துயிலும் இல்லங்கள் புனரமைக்கப்படுவதாக மாவீரர் துயிலுமில்ல மீள் நிர்மாணிப்பு குழுவின் வாகரை பிரதேச ஒருங்கிணைப்பாளர் மேனிகன் தெரிவித்துள்ளார்.