குஜராத்தில் 3000 கோடி ரூபா செலவில் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு சிலை அமைப்பதற்கு விவசாயிகள் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.
182 மீற்றர் உயரம் கொண்ட இந்த சிலையை குஜராத் மாநில அரசு கட்டி வந்தது. உலகின் மிக உயரமான இந்த சிலையானது ஒக்டோபர் 31ஆம் திகதிதிறக்கப்பட உள்ளது.
தங்களது தேவைகளை பூர்த்தி செய்ய விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், அரசாங்கம் ஒரு சிலைக்காக பல கோடி ரூபாய் செலவிடுவது பெரும் அதிர்ச்சி அளிப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
மழையை தொடர்ந்து வரும் நீண்ட வறண்ட கோடைக்காலம், வறட்சியை ஏற்பட்டு விவசாயிகளின் வருமானம் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் இவ்வாறு ஒரு சிலைக்காக இவ்வளவு பணம் செல்விடப்படுவதாக அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்
இந்த சிலை அமைப்பதற்கான பாதிக்கும் மேற்பட்ட செலவினை குஜராத் அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் மீதமுள்ள செலவினை இந்திய மத்திய அரசு அல்லது பொது நன்கொடையினில் இருந்து பெறப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும இந்தசிலையை பார்வையிட ஆண்டுக்கு 2.5 மில்லியன் பார்வையாளர்கள் அங்கு வருவார்கள் எனவும் இதனால் இந்த மாவட்டத்தின் பொருளாதாரம் உயரும் என அரசாங்கம் நம்புகின்றமை குறிப்பிடத்தக்கது.