நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் அரியலூரை சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டிருந்த நிலையில் நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் புதிய செல்போன் செயலி ஒன்றை டெல்லியில் பிளஸ்-2 படிக்கும் தமிழக மாணவி ஒருவர் கண்டுபிடித்துள்ளார். கணினி அறிவியல் படித்து வரும் விருதுநகரை சேர்ந்த இனியாள் என்னும் குறித்த மாணவிஈய இதனைக் கண்டுபிடித்துள்ளார்.
அனிதா போன்ற கிராமப்புற ஏழை மாணவர்கள் கட்டணம் செலுத்தி நீட்’தேர்வுக்கு பயிற்சி பெற முடியாது. அப்படிப்பட்ட மாணவ- மாணவிகளுக்கு இந்த செயலி பேருதவியாக இருக்கும். இதை கூகுள் பிளே ஸ்டோரில் அனீற்றா ( aNEETa ) என டைப் செய்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நீட் தேர்வுக்கு தயாராகும் வகையில் கேள்வி மற்றும் பதில்கள் உள்ளன என மாணவி இனியாள் தெரிவித்துள்ளார்.