இலங்கையில் ஜனநாயக கலாச்சாரத்தையும் நடைமுறைகளையும் பாதுகாக்குமாறும் பின்பற்றுமாறும் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலாளர் பற்றீசியா ஸ்கொட்லாண்ட் (Patricia Scotland) வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும்; பாராளுமன்றத்தை 14 ம் திகதி கூட்டும் ஜனாதிபதியின் அறிவிப்புக்கு வரவேற்புத் தெரிவித்துள்ள அவர் பாராளுமன்றத்தின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியுள்ளதுடன் அரசியல் நெருக்கடிக்கு தீர்வை காணும் வகையில் பாராளுமன்றம் விரைவில் கூடும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
மேலும் அரசியல் தலைவர்களையும் மக்களையும் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபமாறு கேட்டுக்கொண்டுள்ள பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலாளர்; நாட்டின் அரசியலமைப்பும் சட்டத்தின் ஆட்சியும் மதிக்கப்படுவதை உறுதி செய்யுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இலங்கை அரசாங்கமும் மக்களும் வேண்டுகோள் விடுக்கும் பட்சத்தில் ஏனைய நாடுகளுடன் இணைந்து இலங்கைக்கு உதவி வழங்குவதற்குத் தயார் எனவும் பற்றீசியா ஸ்கொட்லாண்ட் தெரிவித்துள்ளார்.