காஷ்மீரில் இருந்து அப்பிள் பெட்டிகளில் மறைத்து டெல்லிக்கு எடுத்துச் செல்லப்பட்ட 200 கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானிலிருந்து கடத்தப்படும் ஹெராயின் போதைப்பொருள், காஷ்மீர் மாநிலம் வழியாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்படுவதனையடுத்து ஜம்மு அருகே உள்ள சுங்கச்சாவடியில், போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, சந்தேகப்படும் வகையில் வந்த பாரவு}ர்தியை நிறுத்தி சோதனையிட்ட போது அப்பிள் பழப்பெட்டிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 50 கிலோ எடை கொண்ட 200 கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். இந்த ஹெரோயின் போதைப்பொருளை டெல்லி ஆசாத்பூர் சந்தைக் கொண்டு செல்லப்பட இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்