154
வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக, காங்கேசன்துறையிலிருந்து 1040 கிலோமீற்றர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது.
கஜா எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த சூறாவளி 24 மணித்தியாலங்களில் மேற்கு மற்றும் வடமேல் மாகாணங்களை ஊடறுவி செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு கடற்கரையோர பிரதேசங்களில் 70 தொடக்கம் 80 கிலோமீற்றர் வேகத்தில் காற்ற வீசக்கூடுமெனவும் கடல் கொந்தளிப்புகள் ஏற்படலாம் என்பதனாலும் கடற்றொழிலில் ஈடுபடுபவர்கள் மற்றும் மீனவர்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு கோரப்பட்டுள்ளது.
Spread the love