அலெப்போ நகரில் நடந்து வந்த போர் முடிந்த போதும் மக்கள், மற்றும் போராட்டக் குழுக்கள் வெளியேறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சிரியாவில் 6-வது ஆண்டாக உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. அங்குள்ள கிழக்கு அலெப்போ நகரை போராளிகளிடம் இருந்து மீட்பதற்காக கடுமையான மோதல்கள் இடம்பெற்று வந்தது.
நகரின் பெரும்பான்மையான பகுதிகளை சிரிய ஜனாதிபதியின் படைகள் மீட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் இரு தரப்புகளுக்கும் நேற்று முன்தினம் போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டது.
இதனையடுத்து நேற்று காலை வரை மோதலகள் இடம்பெறாத போதும் பின்னர் அங்கு குண்டுவெடிப்பு சத்தம் கேட்டதாகவும், அது எங்கிருந்து வந்தது என தெரியவில்லை எனவும் சிரியாவில் உள்ள மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்தது.