172
பாராளுமன்றத்திற்குள் கத்தி ஒன்றை வைத்திருந்ததாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெருமவுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்றையதினம் காவல்துறை அவசர இலக்கத்துக்கு இது தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
நேற்றையதினம் பாராளுமன்றத்தில் மகிந்த ராஜபஸ ஆற்றிய உரையின் நம்பகத்தன்மை தொடர்பில் வாக்கெடுப்பு நடத்துமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையையடுத்து பாராளுமன்றத்தில் அமைதியற்ற நிலை ஏற்பட்டிருந்த நிலையில் பாலித தெவரப்பெருமவின் கையில் கத்தி இருப்பது போன்ற காட்சிகள் ஊடகங்களில் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது
Spread the love