“இன்று நடந்த சம்பவம், மிகவும் வேதனைக்குரியதாகும். 113 பெரும்பான்மை இல்லையாயின், இருப்பவர்களுக்குக் கொடுத்துவிட்டுச் செல்லவேண்டும். வெளிநாட்டுத் தூதுவர்கள் அனைவரும் வந்திருந்தனர். 113 பெரும்பான்மை இல்லாவிட்டால், எதற்காக பலவந்தமாக இருக்கவேண்டும்” – குமார வெல்கம
“பிரதமராக மஹிந்த ராஜபக்ஸவே பதவி வகிப்பார். அவரே, புதிய அரசாங்கத்துக்குத் தலைமை தாங்குவார்” – தினேஸ் குணவர்தன
“மஹிந்த ராஜபக்ஸ மற்றும் அவருக்கு எதிராக நான் முன்வைத்த நம்பிக்கையில்லாப் பிரேரணை, பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேறியது” – எம்.ஏ. சுமந்திரன்
“எனது 25 வருட அரசியல் வாழ்வில், இன்றைய தினத்தை ஒரு கரிநாளாகப் பார்க்கிறேன். இப்போது அரசாங்கம் என்ற ஒன்று இல்லை. நம்பிக்கையில்லா பிரேரணையில் அவர்கள் தோற்றுவிட்டார்கள்” – ரவூப் ஹக்கீம்
“நாடாளுமன்ற உறுப்பினர்களைப் படுகொலை செய்யும் முயற்சியொன்று காணப்படுவதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார். இப்போது, அவ்வாறான முயற்சியை யார் செய்தார்களென்பது புலனாகிறது. இந்த நாட்டின் ஜனநாயகம், நாளுக்கு நாள் சீரழிந்து வருகின்றது” – அநுரகுமார திசாநாயக்க
“மஹிந்த ராஜபக்ஸவுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை, இரண்டாவது முறையாகவும் நிறைவேற்றப்பட்டது.” – பாட்டலி சம்பிக்க ரணவக்க
சபாநாயகர், மற்றும் செங்கோலின் பாதுகாப்புக்காக, சபைக்குள் பிரவேசித்த பொலிஸார் மீதும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதும், மிளகாய்த்தூள் கலந்த நீர் வீசப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதனால், நாடாளுமன்ற உறுப்பினர்களாக விஜித்த ஹேரத், காமினி ஜயவிக்கிரம பெரேரா ஆகியோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.