Home இலங்கைரணிலை பிரதமராக நியமிக்கமாட்டேன் என்பதில் உறுதியாக உள்ளேன் :

ரணிலை பிரதமராக நியமிக்கமாட்டேன் என்பதில் உறுதியாக உள்ளேன் :

by admin

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்கமாட்டேன் என்பதில் தான் உறுதியாக உள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதிக்கும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்றையதினம் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனை உறுதிபடத் தெரிவித்துள்ளார் என அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் நேற்றைய நம்பிக்கையில்லாப் பிரேரணை தீர்மானத்தினையும் தான் ஏற்றுக் கொள்ளமாட்டேன் எனவும் நேற்று தனக்குச் சொன்ன எதனையும் ஐக்கிய தேசிய கட்சி இன்று நாடாளுமன்றத்தில் செய்யவில்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்ததாக லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

அத்துடன் அவர்கள் சொன்னது ஒன்று செய்தது இன்னொன்று. அதனால் தான் இன்றைய தீர்மானத்தினை நிராகரிக்கிறேன் என ஜனாதிபதி தெரிவித்ததாகவும் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More