Home இலங்கைபாராளுமன்றம் இன்று நாடக கூடமாக மாறிவிட்டது :

பாராளுமன்றம் இன்று நாடக கூடமாக மாறிவிட்டது :

by admin

பாராளுமன்றம் இன்று நாடக கூடமாக மாறிவிட்டதாக தெரிவித்துள்ள பிரதமர் மகிந்த ராஜபக்ஸ சட்டரீதியான வகையில் நம்பிக்கையில்லா பிரேரணையை நிறைவேற்றினால் பிரதமர் பதவியை துறந்துவிட்டு செல்லத் தயார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.  கசாகல விகாரையில் நேற்று இடம்பெற்ற வழிபாட்டு நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது எதிர்ப்புகளை வெளிப்படுத்துவதில் எந்தவித பிரச்சினையும் இல்லை எனத் தெரிவித்த அவர் பாராளுமன்றில் கத்தி போன்ற கூரிய ஆயுதங்கள் எடுத்து வரப்பட்டமை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதுவரையில் எந்தவித சட்ட நடவடிக்கையோ, ஒழுக்காற்று நடவடிக்கையோ எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ள மகிந்த ராஜபக்ஸ பாராளுமன்றத்திற்குள் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியாவிட்டால், அதனை பொதுமக்களிடம் ஒப்படைக்குமாறும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படாது சட்டவிரோதமாக அவர்கள் செயற்பட்டால், தமது தரப்பினரும் உரிய வகையில் பதிலடி கொடுப்பார்கள் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More