Home இலங்கையாழில்.வீதி விபத்தில் சிக்கிய இரு முதியவர்கள் சிகிச்சை பயனின்றி உயிரிழப்பு

யாழில்.வீதி விபத்தில் சிக்கிய இரு முதியவர்கள் சிகிச்சை பயனின்றி உயிரிழப்பு

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

யாழில்.வீதி விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த இரு முதியவர்கள் சிகிச்சை பயனின்றி நேற்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளனர். புலோலி கோழிக்­க­டைச் சந்­தி­யில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற விபத்தில் புலோலி வடக்­கைச் சேர்ந்த கந்­த­சாமி குல­நா­ய­கம் (வயது-84) என்பவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயி­ரி­ழந்­தார்.

இறப்பு வீடு ஒன்­றுக்­குச் சென்று வீடு திரும்­பிய முதி­ய­வர் வீதி­யைக் கடந்­த­போது மோட்டார் சைக்கிள் மோதி­யது என்று தெரிவிக்­கப்­பட்­டது. அதேவேளை கடந்த பத்து நாட்களுக்கு முன்னர் விபத்தில் சிக்கிய வல்வெட்டித்துறையை சேர்ந்த வேலுப்பிள்ளை அரியரட்ணம் (வயது 68) என்பவர் யாழ்.போதனா வைத்திய சாலையில் கடந்த பத்து நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் உயிரிழந்தார்.

குறித்த முதியவர் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது ஆவரங்கால் பகுதியில் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கூலர் ரக வாகனத்தின் கதவினை திடீரென சாரதி திறந்ததால் விபத்து ஏற்பட்டது என தெரிவிக்கப்படுகின்றது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More