இலங்கை பிரதான செய்திகள்

மகனை கடித்து குதறிய தந்தை

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


யாழ்.இணுவில் பகுதியில் மதுபோதையில் வீட்டுக்கு வந்த தந்தை தனது 5 வயது மகனை கொடூரமாக கடித்து குதறியுள்ளார் . நேற்று இரவு குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனால் சிறுவனின் கை . முதுகு , முகம் ஆகிய பகுதிகளில் கடுமையான கடி காயங்கள் ஏற்பட்டு உள்ளன.

அந்நிலையில் உறவினர்களால் சிறுவன் மீட்கப்பட்டு தெல்லிப்பளை ஆதார வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , தந்தையை கைது செய்த காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளனர்.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link