Home இலங்கைமஹிந்த மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடிய சாத்தியமில்லை – பிரதமர்

மஹிந்த மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடிய சாத்தியமில்லை – பிரதமர்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மீளவும் ஆட்சி பீடம் ஏறக்கூடிய சாத்தியமில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில்  அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். புதிய அரசாங்கத்தின் கொள்கைகள் வெற்றியளித்து வருகின்ற நிலையில் மஹிந்தவின் ஆட்சி தோல்வியடைந்ததனை மக்கள் புரிந்து கொள்வார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விலகிச் சென்று மஹிந்தவினால் வெற்றியீட்ட முடியாது எனவும், சுதந்திரக் கட்சியில் மஹிந்தவிற்கு வாய்ப்பு கிடைக்கக்கூடிய சாத்தியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். இளம் வாக்காளர்கள் மஹிந்தவை ஆதரிக்கவில்லை கால மாற்றத்துடன் மஹிந்தவின் வாக்குப் பலம் வீழ்ச்சியடையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மாற்றமொன்றை ஏற்படுத்த வேண்டுமென மக்கள் விரும்பினால் வேறும் ஒர் தெரிவினை மேற்கொள்வார்களே தவிர மஹிந்தவிற்கு வாய்ப்பில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் அவ்வாறான சந்தர்ப்பம் ஏற்படாது எனவும் இந்த அரசாங்கத்தின் திட்டங்கள் மக்களை கவரும் எனவும்  வெற்றியளிக்கும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More