Home சினிமாசூப்பர் ஸ்டாராக பாராட்டுப் பெறும் விஜய் சேதுபதி – சீதக்காதி முன்னோட்டம் இணைப்பு

சூப்பர் ஸ்டாராக பாராட்டுப் பெறும் விஜய் சேதுபதி – சீதக்காதி முன்னோட்டம் இணைப்பு

by admin


பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் `சீதக்காதி’ திரைப்படத்தின் முன்னோட்டம் இன்று வெளியாகியுள்ள நிலையில், விஜய் சேதுபதி சினிமாவில் பெரும் நடிகராகவும் சூப்பர் ஸ்டாராகவும் வலம் காட்சிகள் ரசிகர்களிடையே பெரும் பாராட்டை பெற்றுள்ளன.

96 திரைப்படத்திற்கு பின்னர், விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம் `சீதக்காதி’. விஜய் சேதுபதியின் 25ஆவது படமாக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை `நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ என்ற படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரன் இயக்கி உள்ளார்.

இந்த படத்தில் விஜய் சேதுபதி 80 வயதான நாடக கலைஞனாக நடித்துள்ளார். கலைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகி இருக்கும் இந்த படத்தில், இயக்குநர் மகேந்திரன், பாரதிராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில்  டித்துள்ளனர்.படப்பிடிப்பு நிறைவடைந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் முன்னோட்டத்தை (டிரைலரை) படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

டிரைலரில் இருந்து, படத்தில் விஜய் சேதுபதி வயதான சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார். வித்தியாசமான தோற்றத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் சீதக்காதி, விஜய் சேதுபதியின் சினிமா வாழ்க்கையில் ஒரு மைல்கல் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் டிசம்பர் மாதம் கிறிஸ்மஸ் பண்டிகையன்று இப்படம் வெளியாகின்றது.
https://www.youtube.com/watch?v=GDyg4qxeX68
 
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More