கென்யாவின் கிலிப்பி நகரில் உள்ள வணிக மையத்தில் இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதுடன் இத்தாலி பெண் ஊழியர் ஒருவரையும் கடத்திச் சென்றுள்ளனர். இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் 5 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் காயமடைந்தாவர்களில் 3 பேர் குழந்தைகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடத்திச் செல்லப்பட்ட பெண் 23 இத்தாலி நாடைச் சேர்ந்தவர் எனவும் தொண்டு அமைப்பு ஒன்றில் பணியாற்றி வந்தார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த துப்பாக்கிச்சூடு குறித்த பின்னணி மற்றும் தாக்குதல் நடத்திய நபர்கள் யார் என்பது பற்றி உடனடியாக எதுவும் தெரியவராத நிலையில் இதனை ஒரு பயங்கரவாத தாக்குதல் என்ற வகையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.