பிரதமர் மகிந்த ராஜபக்ஸவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை வாக்கெடுப்பில் பாராளுமன்றில் வெற்றியடைந்தாலும் ஐக்கிய தேசியக் கட்சியினரால் தனித்து ஆட்சியமைக்க முடியாது என அமைச்சரவை பேச்சாளரான மகிந்த சமரசிங்க மற்றும் அமைச்சர் தயாசிறிஜய சேகர ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டிலேயே அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்
மகிந்த மீது காணப்படும் வைராக்கியத்துக்காகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஜே.வி.பியும் தற்போது ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவு வழக்கி வருகின்றதே தவிர ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டு சேர்வதற்காக அல்ல எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
122 பெரும்பான்மை இருக்கின்றது என ஐக்கிய தேசியக் கட்சி தற்போது பெருமையடித்துக் கொண்டாலும் அவர்களிடம் 101 பாராளுமன்ற உறுப்பினர்களே காணப்படுகின்றனர் எனவும் ஆனால் தம்மிடம் 104 பேர் காணப்படுவதாகவும் அந்த வகையில் தாமே பெரும்பான்மை கொண்ட கட்சியாக காணப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.