154
பாராளுமன்றில் பெரும்பான்மையை பெற்ற ஐக்கிய தேசிய கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவையே பிரதமராக நியமிக்க வேண்டும் என ஐ.தே.கவின் பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அலரி மாளிகையில் நேற்று மாலை இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற குழுக் கூட்டத்திலேயே மேற்படி இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஒரு நபரை திருப்திப்படுத்துவதற்காக அரசியலமைப்பை மாற்றியமைக்க முடியாது எனவும் ஜனாதிபதிக்கு விருப்பமில்லை என்பதற்காக பெரும்பான்மையை பெற்றவரை பிரதமராக நியமிக்க வேண்டும் என்னும் அரசியலமைப்பு சரத்தை மீற முடியாது எனவும் ஐ.தே.க உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
Spread the love