விசா காலாவதியாகிய நிலையில் மலேசிய விமான நிலையத்தில் தங்கியிருந்த சிரிய அகதி ஒருவர் 7 மாதங்களுக்குப் பின்னர் கனடா அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். சிரியாவைச் சேர்ந்த 37 வயதான ஹசன் அல் கோடார் என்பவர் மலேசியாவுக்கு சுற்றுலா வந்து அங்கிருந்து வேறு நாட்டுக்குச் செல்ல முயன்ற போது கோலாலம்பூர் விமான நிலைய அதிகாரிகள் தடுத்து நிறுத்தியிருந்தனர்.
மேலும் ஹசனின் விசா காலம் முடிந்து விட்டதாகத் தெரிவித்து அவருக்கு அனுமதி மறுத்ததனைத் தொடர்ந்து அவர் விமான நிலையத்திலேயே தங்க வைக்கப்பட்டிருந்தார்.இந்த நிலையில் தற்போது ஏழு மாதங்களுக்குப் பின்னர் இந்த வாரம் அவர் கனடா சென்றடைந்துள்ளார்.
விமான நிலையத்திலிருந்து ஹசன் வெளியே வர உதவிய கொலம்பிய முஸ்லிம் சங்கம் தாங்கள் ஹசனின் பிரச்சினைளைக் கவனித்ததாகவும் அதனைத் தொடர்ந்து அவருக்கு உதவ ஏற்பாடு செய்ததாகவும் தெரிவித்துள்ளனர்.ஹசன் மீண்டும் சிரியா செல்ல மறுத்துள்ளதனைத் தொடர்ந்து ஆவணங்கள் தயாராகக்கப்பட்டு அவர் கனடாவுக்கு அனுப்பப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது