Home உலகம் இஸ்ரேலில் கண்டுபிடிக்கப்பட்ட 9000 ஆண்டு பழமையான கல்லால் ஆன முகமூடி

இஸ்ரேலில் கண்டுபிடிக்கப்பட்ட 9000 ஆண்டு பழமையான கல்லால் ஆன முகமூடி

by admin


9000 ஆண்டுகால பழமையான கல்லால் ஆன முகமூடியை இஸ்ரேல் தொல்பொருள் ஆணையம் வெளியிட்டுள்ளது. உலகில் உள்ள 15 கல் முகமூடியில் இதுவும் ஒன்று எனத் தெரிவிக்கப்படுகின்றது. ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குகரையின் தெற்கில் உள்ள ஹெப்ரானை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து இந்த பழமையான கல்லால் ஆன முகமூடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடத்தில் ஆரம்பத்தில் திருடர்களிடமிருந்து இந்த முகமூடியை அதிகாரிகள் கைப்பற்றியதாக இஸ்ரேல் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த முகமூடி மிக நேர்த்தியாக செய்யப்பட்டுள்ளது எனவும் கன்னத்தில் உள்ள எலும்புகள் மற்றும் மூக்கு எல்லாம் சரியாக அமைந்திருக்கிறது எனவும் இஸ்ரேல் தொல்பொருள் ஆணையகத்தின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More