இங்கிலாந்து கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையினால் அறிமுகப்படுத்தப்படவுள்ள 100 பந்துகள் போட்டியின் உறுதிப்படுத்தப்பட்ட விதிமுறைகள் வெளியாகியுள்ளன. எத்தனை நாட்கள் என்றாலும் வெற்றி கிட்டும் வரை இடம்பெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பின்னர் ஐந்து நாட்களாக குறைக்கப்பட்டதுடன் அதன்பின்னர் ஒருநாள் போட்டியும் அறிமுகப்படுத்தப்பட்டது.
அதன்பின்னர் 20 ஓவர் கிரிக்கெட் தற்போது நடைபெற்று வருகின்ற நிலையில் அதற்கு மிக அதிக அளவில் வரவேற்பு கிடைத்துள்ளதை தொடர்ந்து டி10 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில் 100 பந்துகள் போட்டியை தொடங்க திட்டமிட்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் கட்டுப்பாட்டுசபை தற்போது விதிமுறையை உறுதிப்படுத்தியுள்ளது. அதன்படி ஒவ்வொரு இன்னிங்சும் தலா 100 பந்துகளை கொண்டதாக இருக்கும். ஒவ்வொரு 10 பந்திற்கும் இடையில் பந்து வீசும் திசை மாறும். ஒரு பந்து வீச்சாளர் தொடர்ச்சியாக ஐந்து அல்லது 10 பந்துகள் வீசலாம் என்பதுடன் அதிகபட்சமாக 20 பந்துகள்தான் வீச முடியும் என்பது விதிமுறைகளாகும் என்பது குறிப்பிடத்தக்கது