காவல்துறை அதிகாரம் உள்ளிட்டவற்றை மத்திய அரசாங்கத்துடன் பேசி பெற்றிருக்கமுடியும் என்று மீள்குடியேற்றம் புனர்வாழ்வு மற்றும் இந்தமத அலுவல்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் தமது கட்சியின் நிலைப்பாட்டை பல வருடங்களிற்கு முன்னதாகவே தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ள அவர் மாகாண சபையை நிர்வகித்தவர்கள் தமது அரசியலை தக்க வைத்துக் கொள்வதற்காகவே காலத்தை கடத்தியதாகவும் மத்திய அரசாங்கத்துடன் இது தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்
13 ஆவது திருத்தத்தின் கீழான மாகாண சபையை சரியான முறையில் நடைமுறைப்படுத்தியிருந்தால் வடக்கு இன்று வளமான பிரதேசமாக வளர்ச்சியடைந்திருக்கும் எனவும் கடந்த 5 வருட காலமாக மாகாணசபையின் நிர்வாகத்தை முன்னெடுத்தவர்கள். 5 வருடத்திற்கு பின்னரே குறைபாடுகளை தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மாகாண சபையினால் பொதுமக்களுக்கு குறிப்பிடத்தக்க நன்மை கிடைக்கவில்லை எனவும் அதிகார பகிர்விற்கு தீர்வாக இதனை சரியான முறையில் நடைமுறைப்படுத்தியிருக்க முடியும் எனவும் தெரிவித்த டக்ளஸ், மாகாண சபையின் அதிகாரத்தை எமக்கு வழங்கினால் நிச்சயம் வடக்கினை அபிவிருத்தி செய்வோம் எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தலைமன்னாருக்கும் இராமேஸ்வரத்திற்கும் இடையிலான பயணிகள் சேவை ஆரம்பிப்பது தொடர்பாக இலங்கையிலுள்ள இந்தியத்தூதரகத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதன் மூலம், கேரளாவிலுள்ள ஐயப்பன் புனிததலத்தை வழிபடுவதற்காக செல்லும் இலங்கை பக்தர்கள் பயன்பெறுவதுடன் இலங்கை அகதிகள் நாடு திருப்புவதற்கும் இச்சேவை உதவும் என்றும் அவர் கூறினார். அத்துடன் வடக்கு மாகாணத்தில் வர்த்தக நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கும் இந்த சேவை பெரிதும் உதவும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.