அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். 94 வயதான இவர் முன்னாள் ஜனாதிபதியும் , ஜூனியர் புஷ்{ன் தந்தை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் 41-வது ஜனாதிபதியாகப் பதவி வகித்த ஜோர்ஜ் எச்டபிள்யு. புஷ் கடந்த 1989-ம் ஆண்டு முதல் 1993-ம் ஆண்டு வரை அந்த பதவியில் இருந்தார். முன்னாள் அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன் காலத்தில் இருமுறை துணை ஜனாதிபதியாகவும் ஜோர்ஜ் எச்.டபிள்யு புஷ் இருந்துள்ளர்
கடந்த 1992-ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின்போது, குடியரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட அவர் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் பில் கிளிண்டனிடம் தோல்வி அடைந்திருந்தார்.