ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மாநாடு இன்று பிற்பகல் மணியளவில் கொழும்பு, சுகததாச உள்ளக அரங்கில் நடைபெறவுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் பாரிய பிளவுகள் ஏற்பட்டு 54 உறுப்பினர்கள் மகிந்த ராஜபக்ஸவின் பொதுஜன பெரமுனவில் அங்கத்துவம் பெற்றுள்ள நிலையில் இன்று கட்சியின் மாநாடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ளது. இதன்போது அரச தலைவரின் விசேட உரையையும் ஜனாதிபதி நிகழ்த்தவுள்ளார்.
அத்துடன் இந்த மகாநாட்டின்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகள் குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹன லக்ஷ்மன் பியதாஸ தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.