Home இலங்கைவவுணதீவு படுகொலை – புலிப் புலனாய்வாளர் கைது என்கிறது காவற்துறை…

வவுணதீவு படுகொலை – புலிப் புலனாய்வாளர் கைது என்கிறது காவற்துறை…

by admin


மட்டக்களப்பு, வவுணதீவு பகுதியில் காவல்துறையினர் இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு, கன்னன்துட பகுதியில் வைத்தே குறித்த 2 ஆவது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இவர் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் புலனாய்வு பிரிவை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே ஒருவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், நேற்றையதினம் முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் பலரிடமும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.  இதனையடுத்தே சம்பவம் தொடர்பில் மற்றுமொரு முன்னாள் போராளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

வவுணதீவு, வலையிறவு பாலம் அருகில் வீதிச் வீதி சோதனைச் சாவடியில் கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு கடமையில் இருந்த காவல்துறையினர் இருவர் இனந் தெரியாதோரால் துப்பாக்கிச் சுட்டுக்கு இலக்காகியும் கத்தியால் குத்தப்பட்டும் கொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More