Home இலங்கைமகிந்தவின் மேலதிக பாதுகாப்பை நீக்குக

மகிந்தவின் மேலதிக பாதுகாப்பை நீக்குக

by admin

அமைச்சரவையை இடைநிறுத்தி, மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு வழங்கியதனையடுத்து மகிந்த ராஜபக்ஸ நாட்டின் பிரதமர் இல்லை என்பது உறுதியாகியுள்ளதனால் அவருக்கு வழங்கப்பட்ட மேலதிக பாதுகாப்பை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய தேசியக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார காவல்துறை அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று (04) அலரி மாளிகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்ஸ முன்னாள் ஜனாதிபதி என்பதனால் அவரது பாதுகாப்பை முற்றாக அகற்றாது, பிரதமராக நியமிக்கப்பட்ட பின்னர், வழங்கப்பட்ட மேலதிக பாதுகாப்பை மட்டும் அகற்றுமாறு தான் கோருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதி பிரதமராக மகிந்த நியமிக்கப்பட்டதன் பின்னர் காவல்துறை மா அதிபர், ஐக்கிய தேசியக்கட்சியின் அரசாங்கத்தில் இருந்த அமைச்சர்களின் பாதுகாப்பை நீக்கியது போல், உடனடியாக மகிந்த உள்ளிட்ட பொய்யான அமைச்சர்களின் பாதுகாப்பை திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More