Home பிரதான செய்திகள்கவுதம் காம்பிர் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு

கவுதம் காம்பிர் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு

by admin

இந்திய அணியின் முன்னணி துடுப்பாட்டவீரராக திகழ்ந்த கவுதம் காம்பீர் அனைத்து வகை கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கவுதம் காம்பீர் இந்திய அணி 2007-ம் ஆண்டு இருபதுக்கு 20 உலகக்கோப்பையை வெல்லும்போது 57 ஓட்டங்களையும் 2011-ம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பையை வெல்லும்போது 97 ஓட்டங்களையும் எடுத்து முத்திரை பதித்திருந்தார்

கடைசியாக 2016-ம் ஆண்டு ராஜ்கோட்டில் நடைபெற்ற இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்டில் விளையாடிய காம்பீர் தற்போது டெல்லி அணிக்காக உள்ளூர் தொடர்களில் விளையாடி வருகிறார். இந்நிலையில் இன்று அனைத்து வகை கிரிக்கெட்டிலும் இருந்த ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார்.

கடந்த 2003-ம் ஆண்டு இந்திய ஒருநாள் அணியில் அறிமுகமாகிய 37 வயதாகும் கவுதம் காம்பீர் இந்திய அணிக்காக 58 டெஸ்ட், 147 ஒருநாள் மற்றும் 37 இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்ட் போட்டியில் 22 அரைசதம் 9 சதங்களுடன் 4154 ஓட்டங்களும் ஒருநாள் போட்டியில் 34 அரைசதம், 11 சதங்களுடன் 5238 ஓட்டங்களும் , இருபதுக்கு 20 போட்டியில் 7 அரைசதங்களுடன் 932 ஓட்டங்களும் சேர்த்துள்ளார் என்பர் குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More