கர்நாடகாவில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் 5,912 கோடி ரூபா செலவில் 67.16 டிஎம்சி கொள்ளளவு கொண்ட புதிய அணைக் கட்ட அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது. இதுதொடர்பாக விவாதிப்பதற் காக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தலைமையில் பெங்களூருவில் நேற்று நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் மேகேதாட்டு திட்டத்தை நிறைவேற்றுவது குறித்தும்இ அதற்கு தமிழக அரசு தெரிவித்துவரும் எதிர்ப்பை சமாளிப்பது குறித்தும் விவாதிக்கப்பட் டது.
அத்துடன் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தொடுத்துள்ள மனுவுக்கு பதில் அளிப்பதுஇ காவிரி நீர் மேலாண்மை ஆணையகத்தின் ஆட்சேபனைக்கு பதில் அளிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது
அத்துடன் டி.கே.சிவக்குமார் நேற்று தமிழக முதலமைச்சர் எடப் பாடி பழனிசாமிக்கு அனுப்பிய கடிதத்தில், மேகேதாட்டு திட் டத்தை நட்பு ரீதியாக பேசித் தீர்த்துக்கொள்ள கர்நாடகா விரும்பு கிறது. இந்த திட்டம் நிறைவேற்றப் பட்டால் மழைக்காலத்தில் வீணாக கடலில் கலப்பதை தடுக்க முடியும். ஆனால் இந்த திட்டத்தை தவறாக புரிந்துகொண்டுள்ளனர்.
மேகே தாட்டு திட்டம் குறித்து புரிய வைக் கவும்இ சந்தேகங்களைக் களையவும் நேரில் சந்திக்க நேரம் ஒதுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதேவேளை காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்ட மத்திய அரசு அளித்த அனுமதியை எதிர்த்து தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது