நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலையைத் தொடர்ந்து மகிந்த ராஜபக்ஸ தலைமையில் புதிய கூட்டணி ஒன்றை உருவாக்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றையதினம் நடைபெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் மகிந்த ராஜபக்ஸ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகியன இணைந்து இவ்வாறு புதிய கூட்டணி உருவாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் குறித்த புதிய கூட்டணி நடைபெறவுள்ள தேர்தலில் மகிந்த ராஜபக்ஸ தலைமையில் செயற்படவுள்ளதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.