158
பாராளுமன்றத்தை கலைக்கும் வர்த்தமானி அறிவித்தல் மீதான நீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாற்றை மாற்றக்கூடிய வகையில் அமையும் என இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டவுரிஸ் தெரிவித்துள்ளார். நீதிமன்ற தீர்ப்பு இந்த வாரம் வெளியாகவுள்ள நிலையில் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் இதனை பதிவிட்டுள்ளார்.
ஒருமுன்னாள் சட்ட மாணவன் என்ற அடிப்படையில் தான் இந்த தீர்ப்பினை அறிவதற்காக காத்திருக்கின்றேன் எனவும் உயர்ஸ்தானிகர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love