Home இலங்கைவவுனியா பூவரசங்குளம் காவல் நிலையப் பொறுப்பதிகாரி கைது….

வவுனியா பூவரசங்குளம் காவல் நிலையப் பொறுப்பதிகாரி கைது….

by admin

வவுனியா பூவரசங்குளம் காவல் நிலையப் பொறுப்பதிகாரி கைதுசெய்யப்பட்டுள்ளார். நபர் ஒருவரை சித்திரவதைக்குட்படுத்திய குற்றச்சாட்டின் பேரிலேயே மேற்படி காவல் நிலையப் பொறுப்பதிகாரி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2010 ஆம் ஆண்டு கிரிபத்கொடை காவல்நிலையத்தில் நிலையத்தில் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய வேளையிலேயே ஒருவர் மீது தாக்குதல் நடத்தியதாக அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்தவிடயம் தொடர்பில் மஹர நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் அவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வேளையிலேயே அவர் காவல்துறை விசேட விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More