குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தம்மை அச்சுறுத்தியதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை வழங்குமாறு தமக்கு துமிந்த அச்சுறுத்தல் விடுத்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜப்பானில் வைத்து இதனைக் குறிப்பிட்டுள்ள அவர் பிரதான எதிர்க்கட்சியை இரண்டாக பிளவடையச் செய்து அதில் ஒரு பகுதியை அரசாங்கத்துடன் இணைப்பதற்கு முயற்சிக்கப்பட்டது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால அச்சுறுத்தல் விடுத்தார் என தாம் கூறவில்லை எனவும் துமிந்த அச்சுறுத்தல் விடுத்தது உண்மை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.