Home இலங்கைகடந்த ஜனாதிபதி தேர்தலின் போது பல பில்லியன் ரூபா மத்திய வங்கியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது பல பில்லியன் ரூபா மத்திய வங்கியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது பல பில்லியன் ரூபா மத்திய வங்கியலிருந்து எடுக்கப்பட்டுள்ளதாகவும்  சட்டவிரோதமான முறையில் இந்தப் பணம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர் கடந்த 2015ம் ஆண்டில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கு இரண்டு தினங்களுக்கு முன்னதாக  இவ்வாறு பாரியளவு பணம் வங்கியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் காவல்துறையினரும் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினரும் கூட்டாக இணைந்து விசாரணைகளை நடத்த உள்ளதாகவும் அவர்  குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More