சீனாவிடமிருந்து பெற்ற கடன் காரணமாக இலங்கை அம்பாந்தோட்டை துறைமுகத்தின் மீதான தனது இறைமையை கைவிடவேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதென தெரிவித்துள்ள அமெரிக்க குடியரசுக்கட்சியின் சனப்பிரதிநிதிகள் சபை உறுப்பினர் டனா ரொஹ்ரபச்சர் சீனாவுடனான கடன்பொறியை முடிவிற்கு கொண்டுவரவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
சீனா தேவையற்ற உட்கட்டமைப்பு திட்டங்களை பயன்படுத்தி சிறிய நாடுகளை மோசடி செய்கின்றது என தெரிவித்துள்ள அவர் சீனா ஏழைநாடுகளுக்கு திருப்பிசெலுத்த முடியாத அளவுக்கு கடன்களை வழங்குகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கடன்களை திருப்பி செலுத்தமுடியாத சந்தர்ப்பத்தில் சீனா அந்த சொத்துக்களை கைப்பற்றுகின்றது எனவும் சீனாவின் முக்கிய இலக்காக ஆழமான துறைமுகங்களே காணப்படுகின்றன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கடன்பொறியை முடிவிற்கு கொண்டுவரவேண்டும் எனவும் தாங்கள் இவ்வாறான போக்கை ஆசியா ஆபிரிக்கா இலத்தீன் அமெரிக்கா போன்ற பகுதிகளில் காண்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.