அரசமைப்பில் உள்ள பலவீனங்களை பயன்படுத்தி அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு ரணில்விக்கிரமசிங்க முயல்கின்றார் என குற்றம் சாட்டியுள்ள ஜேவிபி தலைவர் அனுரகுமார திசநாயக்க ஜேவிபி இதற்கு இடமளிக்காது எனவும் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் அதிக ஆசனங்களை கொண்ட கட்சி வேறு எந்த கட்சியுடனும் இணைந்து தேசிய அரசாங்கத்தினை அமைக்கலாம் என்பதை ரணில் காண்பிக்க முயல்கின்றார் என குறிப்பிட்டுள்ள ஜேவிபி தலைவர் அவ்வாறு செய்யாவிட்டால் அமைச்சர்களின் எண்ணிக்கையை 30ஆக ரணில் குறைக்கவேண்டியிருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அடுத்த வருடத்தின் முதல் ஆறு மாதத்திற்குள் பாராளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கிருலப்பனை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
புதிய அரசாங்கத்தையும் அரசியலமைப்புக்கு முரணான முறையில் செயற்படவும் தங்களுடைய கட்சி ஒருபோதும் இடமளிக்காது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்