Home இலங்கையாழில். வாள்வெட்டு வன்முறை கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 9 பேர் கைது…

யாழில். வாள்வெட்டு வன்முறை கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 9 பேர் கைது…

by admin

குளோபல் தமிழ்ச் செய்திகள்…

யாழில். வாள்வெட்டு வன்முறை மற்றும் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எனவும் அவர்களிடமிருந்து ஹைஏஸ் வான் ஒன்றும், ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் 6 வாள்கள் என்பன மீட்கப்பட்டன என சுன்னாகம் காவற்துறையினர்  தெரிவித்துள்ளனர்

இந்தக் கைது நடவடிக்கை நேற்றுத் திங்கட்கிழமை இரவு தொடக்கம் இன்று அதிகாலைவரை முன்னெடுக்கப்படனவும் , கைது செய்யப்பட்ட அனைவரும் 20 மற்றும் 21 வயதுடையவர்கள். அவர்கள் அரியாலை, மானிப்பாய், மற்றும் யாழ். நகர் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் காவற்துறையினர்   தெரிவித்தனர்.

அத்துடன் புன்னாலைக்கட்டுவனில் இடம்பெற்ற கொள்ளை, அரியாலையில் வங்கி முகாமையாளரின் வீடு மீது நடத்தப்பட்ட தாக்குதல், பெற்றோல் குண்டுத் தாக்குதல்கள் உள்ளிட்ட கொள்ளை மற்றும் வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்

கைது செய்யப்பட்ட நபர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் விசாரணையின் பின்னரே முழுமையான விவரங்களை வெளியிட முடியும் எனவும், சந்தேகநபர்கள் அனைவரும் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்கள் எனவும்  காவற்துறையினர்   மேலும் தெரிவித்தனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More