Home இலங்கைநாட்டின் அரசியல் குழப்பத்தைப் பயன்படுத்தி, 46 பெரும்பான்மையினர் வடக்கில் நியமனம்…

நாட்டின் அரசியல் குழப்பத்தைப் பயன்படுத்தி, 46 பெரும்பான்மையினர் வடக்கில் நியமனம்…

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…


நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்ப நிலையை பயன்படுத்தி பெரும்பான்மையினத்தை சேர்ந்த 46 பேருக்கு வடமாகாணத்திற்கு நியமனம் வழங்கப்பட்டு உள்ளது. நாட்டில் 50 நாட்களாக அரசியல் குழப்ப நிலை ஏற்பட்டு இருந்தது. அதன் போது மஹிந்த ராஜபக்சே தலைமையில் அமைச்சரவை ஒன்று உருவாக்கப்பட்டு இருந்தது. அதில் எரிபொருள் மின் சக்தி அமைச்சராக நியமிக்கப்பட்ட சியம்பலாப்பிட்டிய கேகாலை மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு இந்த நியமனங்களை வழங்கியதாக கூறப்படுகின்றது.

இது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவிக்கையில் , கடந்த அக்டோபர் மாதம் 26ம் திகதிக்கு பின்னர் இடம்பெற்ற அரசியல் குழப்பங்களைப் பயன்படுத்தி வடக்கு மாகாணத்தில் இலங்கை மின்சார சபையில் காணப்பட்ட வெற்றிடங்களிற்கு தெற்கு இளைஞர்களை நியமனம் செய்துள்ளமை தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக க.பொ.த உயர்தர கல்வி தகுதி உடையவர்களுக்கு வழங்க கூடிய வெற்றிடங்களை க.பொ.த. சாதாரண தர கல்வி தகுதிடையவர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது.

இந்த வெற்றிடங்களிற்கு எமது மாகாண இளைஞர்களை நியமனம் செய்யுமாறு நாம் நீண்டகாலமாக கோரி வந்த நிலையில் அந்த வெற்றிடங்களிற்கு இவ்வாறு இரகசியமான முறையில் எந்த விண்ணப்பமும் கோராமல் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு நியமனம் செய்யப்பட்ட அனைவருமே கேகாலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என கண்டறிந்துள்ளோம்.

எனவே அரசியல் குழப்ப நிலை காணப்பட்ட கால பகுதியில் வழங்கப்பட்ட நியமனங்களை இரத்து செய்யுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அபிவிருத்தி செயலணியின் கவனத்திற்கு கொண்டு செல்ல உள்ளதாக மேலும் தெரிவித்தார்.

அதேவேளை , அரசியல் குழப்ப நிலை காணப்பட்ட வேளை ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனா , நியமனங்கள் எதுவும் வழங்கப்பட கூடாது என உத்தரவிட்டிருந்த போதும் , அதனையும் மீறியே குறித்த நியமனங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

Spread the love
 
 
      

Related News

1 comment

Siva December 19, 2018 - 11:31 am

வட மாகாணத்தில், யாழில் மட்டும் 46 சட்டவிரோத நியமனங்கள் என்றால், இலங்கை பூராவும் எத்தனை நியமனங்கள் இடம்பெற்றனவோ, யாரறிவார்?

திரு. மகிந்த ராஜபக்ஷ அரசு ஒரு காபந்து அரசு என்றும், அரச நியமனங்கள் எதையும் மேற்கொள்ள வேண்டாம் என்றும் மிகத் தெளிவாக ஜனாதிபதி கூறியிருப்பதனால், இந்த நியமனங்கள் உடனடியாக மீளெழுக்கப்பட வேண்டும்.

இதையும் ஜனாதிபதி சந்தர்ப்பத்துக்கு ஏற்பச் சும்மா கூறியிருப்பாரோ என்ற சந்தேகம் எழுவதையும் தவிர்க்க முடியவில்லை. அவர்தான் ஒரு கொமெடியன் ஆகிவிட்டாரே? அவர் கருத்துக்களை நம்பிய எம்மில்தான் தவறு இருக்கின்றதோ?

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More