இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் வழங்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணை எதிர்வரும் பெப்ரவரி 26ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கின் விசாரணை நேற்றையதினம் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் சிறப்பு நீதிபதி அருண் பரத்வாஜ் முன்னிலையில் நடைபெற்றது.
விசாரணை ஆரம்பமானதும் குற்றம் சுமத்தப்பட்டவர்களில் ஒருவரால் தற்போது நடைபெற்று வரும் இந்த விசாரணைக்கு உச்சநீதிமன்றத்தினால் ஜனவரி 29-ந் திகதிவரை இடைக்கால தடை விதித்து உள்ளதாக கூறி, அது தொடர்பான உத்தரவின் நகல் நீதிபதியிடம் தாக்கல் செய்யப்பட்டது.
அதுவரை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையை தள்ளி வைக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வருகிற பெப்ரவரி 26ம் திகதிக்கு விசாரணையை தள்ளிவைத்து உத்தரவு பிறப்பித்தார்