இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான லஹிரு குமாரவுக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவையால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நியூஸிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது விதிமுறைகளை மீறி செயற்பட்டமை தொடர்பிலேயே இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.
போட்டியில் 96 ஓவரின் போது டொம் லதம் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் லஹிரு குமார களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில் வசைபாடியதாகவும் இதனூடாக அவர் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் விதிமுறைகளை மீறியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது
இதற்காக போட்டிக்கான அவரது கட்டணத்தில் இருந்து 15 வீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், அவருக்கு எதிராக ஒரு கரும் புள்ளி பதிவு செய்யப்படுவதாகவும் சர்வதேச கிரிக்கட் சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.