பயங்கரவாத தாக்குதல் அச்சம் காரணமாக ஜேர்மனியின் முக்கிய விமானநிலையங்களின் பாதுகாப்பை அதிகாரிகள் பலப்படுத்தியுள்ளனர். ஜேர்மனியின் ஸ்ரட்கார்ட் விமானநிலையத்தி;ற்கு வெளியே சந்தேகத்திற்கிடமான முறையில் நால்வர் நடமாடிய சம்பவத்தை தொடர்ந்து இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விமானநிலையத்தை புகைப்படமெடுத்துள்ளதாக தெரிவித்து தந்தை ,மகன் உட்பட நால்வரை தேடி வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஜேர்மனியின் அனைத்து விமானநிலையங்களிலும் பாதுகாப்பு படையினர் உசார்நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் எனவும் குறித்த தந்தையும் மகனும் விமானநிலையத்தை படம்பிடிப்பது கண்காணிப்பு கமராக்களில் பதிவாகியுள்ள நிலையில் அதன் பின்னர் அவர்கள் காணாமல்போயுள்ளனர் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மொராக்கோ புலனாய்வு பிரிவினர் குறித்த தந்தை மற்றும் மகன் குறித்த பெயர் விபரங்களை வெளியிட்டுள்ளனர் எனவும் ஜேர்மனியின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜேர்மனியில் கடந்த 2016ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் தினத்திற்கு முன்னர் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.