இலங்கை பிரதான செய்திகள்

மகிந்தவா? சம்பந்தரா? எதிர்க்கட்சி தலைவர் தொடர்பில் இன்று இறுதி தீர்மானம்!


இலங்கைப் பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவர் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைக்கு இன்று இறுதி தீர்மானத்தை சபாநாயகர் கரு ஜயசூரிய மேற்கொள்ளவுள்ளார். இன்று காலை 10.30 மணியளவில் பாராளுமன்றம் கூடுகின்றது. முதல் அமர்விலேயே எதிர்கட்சிப் பதவி தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை புதிய எதிர்கட்சித் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டதை தொடர்ந்து ஆளும், எதிர்கட்சிகளுக்கிடையில் பாரிய முரண்பாடுகள் தோற்றம் பெற்றன. கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவை தலைவராக இருக்கையில், அதே கட்சியை சேர்ந்த மற்றொருவரான மகிந்த ராஜபக்ச எதிர்கட்சித் தலைவராக இருக்க முடியாது என்றும் எம்.ஏ. சுமந்திரன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதனால் எதிர்க்கட்சித் தலைவர் பதவி குறித்து ஆராய்வதற்கு நாடாளுமன்றத்தில் தெரிவுக்குழு ஒன்றை நியமிக்க வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசிய முன்னணி ஆகிய கட்சிகள் சபாநாயகரிடம் கோரிக்கையொன்றை முன்வைத்தனர்.குறித்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட சபாநாயகர், எதிர்கட்சித் தலைவர் பதவி தொடர்பாக இன்று இறுதி தீர்மானத்தை வழங்கவுள்ளதாக உறுதியளித்துள்ளார். அத்துடன் அடுத்த ஆண்டின் முதல் நான்கு மாத காலத்திற்கான வரவு-செலவு திட்ட இடைக்கால கணக்கறிக்கையை நிதியமைச்சர் மங்கள சமரவீர இன்று பாராளுமன்றத்தில் சமர்பிக்கவுள்ளார். இதனையடுத்து, இடைக்கால கணக்கறிக்கை மீதான வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.