157
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கடந்த ஒரு ஆண்டு காலப்பகுதியில் அத்து மீறல்களில் ஈடுபடும் இந்திய மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கை 50 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது. அத்துமீறல்களில் ஈடுபடும் இந்திய மீனவர்களையும் படகுகளையும் தொடர்ச்சியாக கைது செய்த காரணத்தினால், அத்துமீறல்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைக் கடற்பரப்பில் பெருமளவிலான மீன்களை இந்திய மீனவர்கள் பிடித்துச் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது. இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் ஆழ்கடல் மீன்பிடி முறையினால் கடல் வளங்கள் அழிவடைவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
Spread the love